சோற்றுடன் குழைத்து உண்ணுவதற்கு வாழைக்காய் கறி செய்வது | Banana Curry Recipe ! எப்படி?

#Cooking #Vegetable #curry
சோற்றுடன் குழைத்து உண்ணுவதற்கு வாழைக்காய் கறி செய்வது | Banana Curry Recipe ! எப்படி?

தேவையான பொருட்கள் :

  • பெரிய வாழைக்காய் – 1
  • பெரிய வெங்காயம் – 1
  • மீடியம் சைஸ் தக்காளி – 2
  • இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
  • மல்லித் தூள் (தனியா தூள்) – ஒன்றரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • கடுகு – ஒரு டீஸ்பூன்
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு
  • பெருங்காயம் – கால் டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
  3. வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்குங்கள்.
  4. இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள்.
  5. இனி அடுப்பை மிதமாக்கி மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறுங்கள். சூப்பரான வாழைக்காய் கறி ரெடி.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!